ஃப்றைட் நூடுல்ஸ்



தேவையானவை
  •  கரட் ,முட்டைக்கோவா – 2௦௦ கிராம்
  •  பிஞ்சு மஞ்சள் போஞ்சி - 100 கிராம்
  •  லீக்ஸ் தண்டு - 225 கிராம்
  •  3 மே.க மார்ஜரீன், வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தாவரநெய்
  •  மிளகுதூள்,உப்புத்தூள் - 1¼ தே.க.
  •  .அஜினொமொட்டோ - ½ தே.க
  •  பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி
  •  ஏலப்பொடி
  •  சோயா ஸோஸ்,.தக்காளி ஸோஸ் – 2 மேசை கரண்டி


செய்முறை : 

Step 1.
நூடில்ஸை முறைப்படி வேகவிடவும்,அல்லது விரும்பிய நீளத்தில் முறித்து கொதித்துக்கொண்டு இருக்கும் நீரில் போட்டு, 2 நிமிடங்கள் வேகவிட்டு, நல்ல விறைத்த பததில் வெந்தவுடன் வடித்து, வடியுடன் வைத்துத் தண்ணீரில் கழுவிக்கொள்க.

Step 2.
கோவா, லீக்ஸ் என்பவற்றை 1 செ.மீ. அகலமும், 2 செ.மீ. நீளமுமான துண்டுகளாக வர வெட்டிக்கொள்க. கரட்டை சுரண்டிக் கழுவி, ½ செ.மீ. நீளாத்துண்டுகளாக வெட்டவும்.

Step 3.
போஞ்சியையும் பிளந்து ஒரு அகலமான தாச்சியில் மார்ஜரீனைக் காயவிட்டு, வெட்டிய வெங்காயம், பச்சை மிள்காய், பூடு, விரும்பினால் இஞ்சி, றம்பை, என்பவற்றை வாசனை வரப் பொன்னிறமாக வதக்கி, இதில் வெட்டிய மரக்கறி, மிளகுதூள், உப்பு, அஜினொமொட்டோ என்பவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறிவிட்டு,

Step 4.
பிறகு ஒரு மூடியினால் மூடி, நிதானமான நெருப்பில் விட்டு, 5 நிமிடங்கள் வேக விடவும். விறைத்த பதத்தில் ஓரளவு மெதுமையாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

Step 5.
முழுவதும் சமமாகச் சிவந்து பொரித்தவுடன், கொதிக்கும் நீரைக் கைவசம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் புரட்டி, நீர் வற்றி நூடில்ஸ் நல்ல விறைத்த பதத்தில் வெந்தவுடன், நசுக்கிப் பார்த்து, உள்ளேயும் வெந்திருந்தால் இறக்கி பறிமாறவும்.


Comments

Popular posts from this blog

சத்தான நண்டு நூடுல்ஸ்

சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ்

முட்டை நூடுல்ஸ்